பள்ளிக்கூடம் போகாமலே... - வீட்டிலிருந்தே படிக்கும் சகோதரிகள்!

பள்ளிக்கூடம் போகாமலே... - வீட்டிலிருந்தே படிக்கும் சகோதரிகள்!

கா.சு.வேலாயுதன்

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கவும் இடம் பிடிக்கவும் கிட்டத்தட்ட படையெடுப்பே நடத்தும் பெற்றோர்கள் உண்டு. எதையோ பறிகொடுத்ததைப்போல, எப்போதும் பதற்றமாகவே இருப்பார்கள். போட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகள் பின்தங்கிவிடக் கூடாது என்ற பயம்தான் அதற்குக் காரணம். ஆனால், பள்ளிக்கு வெளியிலும் படிப்பு சாத்தியம் என்ற நிதர்சனத்தை உணர்ந்துகொண்டு, தங்களது மகள்களுக்கு சுதந்திரமான கல்விக்கு வழி வகுத்திருக் கிறார்கள் கோவையைச் சேர்ந்த குமரகுருபரன்–ஜெயலட்சுமி தம்பதியினர்.

கோவை ஹோப்- காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் டெய்லரிங்-எம்ப்ராய்டரிங் கடை நடத்துகிறார் ஜெயலட்சுமி. அதற்கு அருகிலேயே அக்குபஞ்சர் கிளினிக் வைத்திருக்கிறார் அவரது கணவர் குமரகுருபரன். இவர்களுக்கு திருமகள், கலைமகள் என இரண்டு பெண் பிள்ளைகள். தாங்கள் பணிபுரியும் இடத்தையே இந்தப் பிள்ளைகளுக்காக வகுப்பறையாக மாற்றி இருக்கிறார்கள் இந்தத் தம்பதியர்! காலை எழுந்தவுடன் படிப்பு. பின்பு கனிவான தாயிடம் தொழில் பயிற்சி என்று துறுதுறுவென இருக்கிறார்கள் இரண்டு மக்களும்!

“வீட்டுல இருந்தே பொண்ணுங்களைப் படிக்க வைக்க எது தூண்டுதலா இருந்துச்சு...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in