பத்து நாட்களுக்குள் இத்தனை பஞ்சாயத்து!- முதல்வரை சங்கடப்படுத்திய முந்திரிக்கொட்டை மந்திரிகள்

பத்து நாட்களுக்குள் இத்தனை பஞ்சாயத்து!- முதல்வரை சங்கடப்படுத்திய முந்திரிக்கொட்டை மந்திரிகள்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம் போன்ற சர்ச்சை, உளறல் அமைச்சர்களின் வரலாற்றை அப்படியே தொடர்கிறார்கள் திமுகவின் சில இளம் அமைச்சர்கள். அதிமுக அமைச்சர்களின் செயல்கள் கூட கோமாளித்தனமாக மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால், திமுக இளம் அமைச்சர்களின் செயல்கள் அத்துமீறலாகவும், ஆணவச் செயலாகவும் விமர்சிக்கப்படுகின்றன.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

திமுக அமைச்சரவையின் 34 அமைச்சர்களில் சீனியாரிட்டிப்படி, 26-வது இடத்தில் இருப்பவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இவ்வளவு இளையவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்போ, மிகமிக முக்கியமான துறையான நிதித் துறை. திமுக வரலாற்றில் நிதி அமைச்சர் பொறுப்பை முதல்வரே வைத்துக்கொள்வது ஆரம்ப காலத்தில் ஒரு மரபாகவே இருந்திருக்கிறது. 1967-ல் முதல்வரான அண்ணா, தன்னுடைய பொறுப்பிலேயே நிதித்துறையை வைத்துக்கொண்டதுடன், பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அப்போது அவர் ஆற்றிய உரை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கருணாநிதியின் மாநிலச் சுயாட்சி முழக்கம், ஜெயலலிதாவின் பொருளாதாரச் சுதந்திரமே உண்மையான சுதந்திரம் என்ற சுதந்திர தின முழக்கம் போன்றவற்றின் அடிப்படை அண்ணாவின் உரையில் இருந்து கிடைத்தவை தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in