காரு, பங்களா எதுக்குங்க..?- பெட்டிக்கடை நடத்தும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.!

காரு, பங்களா எதுக்குங்க..?- பெட்டிக்கடை நடத்தும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.!

முன்னாள் எம்.பி.,எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் என்றால் ஒன்று கல்வித் தந்தைகளாக இருப்பார்கள்... இல்லாவிட்டால் ‘திறமையாக’ சேர்த்த பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்து தொழிலதிபர்களாக இருப்பார்கள். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.பி.வெங்கிடு டீக்கடையும் பெட்டிக்கடையும் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்!

கோபிச்செட்டிபாளையம் கடைவீதியில் பெரியார் சிலைக்கு நேர் எதிரே இருக்கிறது அந்தப் பெட்டிக்கடை. வெற்றிலை பாக்கு, பழம், பீடி, சிகரெட், பத்திரிகைகள் மட்டுமல்ல... அத்தோடு சேர்ந்திருக்கும் டீக்கடையில் சுடச்சுட டீயும் காபியும் கிடைக்கிறது. கடைக்கு வருபவர்களுக்கு கேட்டதை எடுத்துக் கொடுத்து கல்லாவில் காசை வாங்கிப் போட்டுக்கொண்டிருக்கிறார் வெங்கிடு. 85 வயதைக் கடக்கும் இவர், கடந்த 1996 தேர்தலில் அதிமுக வேட்பாளர் செங்கோட்டையனை வீழ்த்தி திமுக எம்.எல்.ஏ-வாக சட்டமன்றம் சென்றவர்.

``கோபி தொகுதியில இதுவரை 7 முறை போட்டியிட்டிருக்கும் செங்கோட்டையன் ஒரே ஒரு முறை மட்டும்தான் தோற்றார். அது எங்க அப்பாக்கிட்டதான்” என மகன் மணிமாறன் நமக்கு முன்னுரை கொடுக்க, வெள்ளந்தியாகப் பேச ஆரம்பித்தார் வெங்கிடு.

``1996 தேர்தல்ல கோபி தொகுதியை முதல்ல தமாகா-வுக்குத்தான் ஒதுக்குனாங்க. அப்புறம், வேட்பாளர் பிரச்சினையில அவங்க பவானி தொகுதிய கேட்டு வாங்கினதால இந்தத் தொகுதி திமுக-வுக்கு வந்துருச்சு. அந்தச் சமயத்துல, செங்கோட்டையனை எதிர்த்து நிற்க திமுக-வுல யாருக்கும் தைரியம் இல்லை. ஆனாலும், என்னைக் கேட்காமலே என்னை வேட்பாளரா அறிவிச்சிருச்சு திமுக தலைமை. அப்புறமென்ன... 15 ஆயிரம் ஓட்டுல நான் ஜெயிச்சேன்” என்று சொன்ன வெங்கிடு, மெள்ள பழைய நினைவுகளைப்புரட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in