Published On : 21 Mar 2020

கரோனா - மாஸ்டர்!

social-media

இணையத்தில் பரவும் கரோனா பீதிகளுக்கு மத்தியில் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க, விஜய், விஜய் சேதுபதி இருவரின் பேச்சும், ஆட்டமும் கடந்த வாரம் வைரலானது. விஜய் வழக்கம்போல அட்வைஸ் பன்ச் சொல்லி தெறிக்கவிட, விஜய் சேதுபதி அரசியல் பன்ச் பேசி அன்றைய ட்ரெண்டிங்கில் விஜயை ஓவர்டேக் செய்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கொடுத்த பதில் மேலும் வைரலானது. ஆனாலும், விழாவில் விஜய் ஆடிய நடனம் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. விஜய், விஜய் சேதுபதி இருவருக்குமே ரசிகர்களிடையே கிரேஸ் கூடிக்கொண்டே போகிறது. இருவரது ரசிகர்களும் ‘மாஸ்டர்’ ரிலீஸுக்காக வெயிட்டிங்!

Already registered user? please login to read

Sign in with

OR

LOGIN

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil