கரோனா - மாஸ்டர்!

கரோனா - மாஸ்டர்!

இணையத்தில் பரவும் கரோனா பீதிகளுக்கு மத்தியில் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க, விஜய், விஜய் சேதுபதி இருவரின் பேச்சும், ஆட்டமும் கடந்த வாரம் வைரலானது. விஜய் வழக்கம்போல அட்வைஸ் பன்ச் சொல்லி தெறிக்கவிட, விஜய் சேதுபதி அரசியல் பன்ச் பேசி அன்றைய ட்ரெண்டிங்கில் விஜயை ஓவர்டேக் செய்தார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கொடுத்த பதில் மேலும் வைரலானது. ஆனாலும், விழாவில் விஜய் ஆடிய நடனம் டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எல்லோரையும் ஆடவைத்துக் கொண்டிருக்கிறது. விஜய், விஜய் சேதுபதி இருவருக்குமே ரசிகர்களிடையே கிரேஸ் கூடிக்கொண்டே போகிறது. இருவரது ரசிகர்களும் ‘மாஸ்டர்’ ரிலீஸுக்காக வெயிட்டிங்!

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சிறந்த யோசனை கூறுபவர்களுக்கு 1 லட்ச ரூபாய் பரிசு. - பிரதமர் மோடி

உள்ளங்கையில் உரலை வைக்கவும்; கரோனா கிருமியை பிடித்து அதற்குள் போடவும்... சாகவில்லை என்றால் நங்கு நங்குனு குத்தவும்..?! - சுல்தான்

தமிழக அரசியலில் புள்ளி வைத்து விட்டேன். - ரஜினி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in