சோதனைகளை வென்ற சொல்கேளான்!- புன்னகையூட்டும் புனைவுக்காரர்

சோதனைகளை வென்ற சொல்கேளான்!- புன்னகையூட்டும் புனைவுக்காரர்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை ‘சொல்கேளான்’ என்று அப்பாக்கள் திட்டுவதுண்டு. அப்பாவிடம் மட்டுமல்ல, வாழ்க்கையிடமும் அடிபட்டு, மிதிபட்டு, தன் அனுபவங்களை எழுதத்தொடங்கி, ‘சொல்கேளான்’ என்ற புனைப்பெயரில் ஊரறிந்த எழுத்தாளராகிவிட்டார் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த விருத்தகிரி எனும் ஏ.வி.கிரி.

72 வயதைத் தொடும் இவர் மகா குசும்புக்காரர். கடினமான உழைப்பாளி. அபாரமான நகைச்சுவை உணர்வுக்காக முகநூலில் ஒரு கூட்டமே இவரைப் பின்தொடர்கிறது. சோகம் ததும்பும் அனுபவங்களை, சிலாகிக்க வைக்கும் நகைச்சுவை உணர்வு கலந்து இவர் எழுதிய, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ உள்ளிட்ட புத்தகங்களுக்கு நல்ல வரவேற்பு.

ஒரு திருமண நிகழ்வுக்காக விருதுநகர் வந்திருந்த இந்த பிஸி பிஸினஸ்மேனைச் சந்தித்தேன். உரையாடல் தொடங்கியதும் விருத்தகிரியின் மனைவி கனகலட்சுமி அங்கிருந்து நகர்ந்தார். “நீங்களும் இருக்கலாமே” என்று சொன்னபோது, “இல்ல... இவரு நிறைய பொய் சொல்லுவாரு... நம்மால முடியாது” என்று சொல்ல ஒரே சிரிப்பலை. இனி சொல்கேளான் சொல்வதைக் கேட்போம்.
“சின்ன வயசுல இருந்தே எனக்கு வாய் திக்கும். படிப்பும் ரொம்ப சுமார். 'எஸ்எஸ்எல்சியே மூணுவாட்டி எழுதியிருக்க. நீ எந்தக் காலத்துல டிகிரி வாங்கப் போற, பேசாம வியாபாரத்தைப் பாருடா'ன்னு அப்பாவே செல்லிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in