ஹாட் லீக்ஸ்- வாங்கண்ணே... வரிச்சியூர் அண்ணே!

ஹாட் லீக்ஸ்- வாங்கண்ணே... வரிச்சியூர் அண்ணே!

ஆல்ரைட் பாலு... அப்செட் வேலு!

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதையடுத்து இதுநாள் வரை துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை பேசிய விதமாகப் பேசி தனக்காக ரிசர்வ் செய்துவைத்துவிட்டாராம் டி.ஆர்.பாலு. அதேநேரம், ஸ்டாலின் வீட்டு கிச்சன் கேபினெட் செல்லப்பிள்ளையான எ.வ.வேலு தனக்கு பொருளாளர் பதவி கிடைக்கும் என்று பெருங்கனவில் மிதந்தாராம்.

தற்போது, பாலுவுக்குத்தான் அந்தப் பதவி என்றதும் வேலு ஏகத்துக்கும் அப்செட் என்கிறார்கள். இருந்தாலும் கூடுதலாக இன்னொரு துணைப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி அந்த இடத்தில் வேலுவை அமரவைக்கலாமா என யோசிக்கிறதாம் திமுக தலைமை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in