பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சென்னை

ஐஸ் அவுஸ் பகுதி ஜூஸ் கார்னரில் இருவர்...
“அட... எங்க தலைவர் சொன்னது எனக்கே குத்துமதிப்பாதான் புரிஞ்சது... உனக்கு எப்படித் தெளிவா புரியுதுன்றே..?”
“அவர் என்ன சொன்னாரு... மீன் குழம்பு வைக்க ஒரு பாத்திரமும், சர்க்கரை பொங்கல் வைக்க ஒரு பாத்திரமுமா ரெண்டு பாத்திரங்கள வச்சுக்குங்கனு சொல்லிருக்காரு... இதில என்ன உனக்கு குழப்பம்?”
“அடேய்... ராசா... நீ ரொம்பவே புரிஞ்சி வச்சிருக்கே... என்னை ஆளை விடு சாமி!”
தஞ்சாவூர், பா து பிரகாஷ்

தஞ்சவூர்

கீழவாசலில் விஜய், அஜித் ரசிகர்கள்...
“என்னப்பா உங்க தளபதி அரசாங்கத்தை கிழிச்சு தொங்க விடுவார்னு பார்த்தா, தமாஸா பேசிட்டுப் போறாரே...”
“உசுப்பேத்தறவன்கிட்டே உம்முன்னும், கடுப்பேத்தறவன்கிட்டே கம்முன்னும் இருக்கணும்னு அவர்தானே சொன்னார்..!”
“அஜித் நண்பர்னு கமுக்கமா தலையை இழுத்தது எதுக்கு..?அவர் வீட்டிலேயும் ரெய்டு போவாங்களான்னு டெஸ்ட் பண்றதுக்கா..?”
“அது நட்பு பேணுதல்டா! அடப்பாவிகளா...கரோனாவை விட , பயங்கர வைரஸா இருப்பீங்க போலேயே!”
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in