சூர்யாவின் 10 கேள்விகள்

சூர்யாவின் 10 கேள்விகள்

தொகுப்பு: தேவா

கடந்த வாரம் இணையத்தில் கர்நாடக அரசியலை எல்லாம் கடந்து பலரது கவனத்தை ஈர்த்தது சூர்யாவின் 10 கேள்விகள்தான். புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா எழுப்பிய கேள்விகளுக்குப் பல முக்கியப் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்திய அளவில் ட்ரெண்டானார் சூர்யா. 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை உள்ளடக்கியுள்ள கல்விக் கொள்கையில் ஏன் இத்தனை அவசரம் என்பது சூர்யா முன்வைக்கும் முக்கியமான கேள்வியில் ஒன்று. புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்துத் தெரிவிக்கலாம் என்று அரசே கூறியுள்ள நிலையில் சூர்யாவின் கேள்விகளுக்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள்தான் கிளம்பியிருக்கின்றன. “அவர் வன்முறையைத் தூண்டுகிறார்” என்று ஹெச் ராஜாவும், ”கிராமப்புறத்து மாணவர்களுக்காக உங்களுடைய படத்துக்கு டிக்கெட் விலையைக் குறைப்பீர்களா?” என்று தமிழிசையும் சம்பந்தமே இல்லாமல் கருத்து கூறினர். இதனால் சூர்யாவுக்கு ஆதரவு பெருகிவருகிறது. இயக்குநர் கரு.பழனியப்பன் "நல்லவேளை சூர்யா கிறிஸ்தவர் இல்லை. ஒருவேளை அப்படியிருந்திருந்தால், 'ஆல்பர்ட் சூர்யா'னு பா.ஜ.க-வினர் சொல்லியிருப்பாங்க” என்று பாஜகவினரைக் கிண்டலடித்தார். இவை அனைத்துமே இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. ஆனால், சூர்யா கேட்ட கேள்விகளுக்கு மட்டும் இன்னும் பதில் வரவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சியில் அனைவருமே தலைவர்கள் தான்.
- மருத்துவர் ராமதாஸ்

ஆனா இந்த எம்பி, அமைச்சர் மாதிரியான ஆட்சி பதவிகளுக்கு சின்னய்யா மட்டும்தான் தலைவரு.
- ஜால்ரா காக்கா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in