ஷேவ் செய்யும் காசில் சேவை!- அட்ராசக்கே தாடிக்கார சேட்டன்கள் 

ஷேவ் செய்யும் காசில் சேவை!- அட்ராசக்கே தாடிக்கார சேட்டன்கள் 

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

‘தாடிகளெல்லாம் தாகூரா... மீசைகளெல் லாம் பாரதியா?’ எனும்  ‘இருவர்’ படத்தின் பாடல் வரி, தோற்றத்தை வைத்துப்பம்மாத்து காட்டுபவர்கள் மீது வைரமுத்து வைத்த விமர்சனம். தாடி வைத்திருப்பவர்களெல்லாம் தாகூர் ஆகிவிட முடியாதுதான், ஆனால், தர்ம காரியம் செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறது கேரளத்துத் தாடிக்காரர்களின் சங்கம். திருச்சூரில் அந்தச் சங்கத்தின் இரண்டாவது ஆண்டு விழா பற்றிய தகவலறிந்து அங்கு சென்றிருந்தேன்.

கழுத்தைத் தாண்டி வளர்ந்த கருகரு தாடியும், மஞ்சள் டி-ஷர்ட்டுமாக ஏகப்பட்ட இளைஞர்களின் கூட்டத்தால் அந்த அரங்கமே நிரம்பிவழிகிறது. பரஸ்பரம் அறிமுகங்கள், கைகுலுக்கல்கள், நல விசாரிப்புகள் என்று எங்கும் உற்சாகம்.

முன் பின் அறிமுகம் இல்லாத இவர் கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்த்திருக்கிறது தாடி! ஆம், தாடி வளர்க்க அங்கே சங்கமே வைத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in