நான் ஹீரோயினா நடிப்பேன்னு நினைக்கவேயில்லை!- மோனிகா சின்னகோட்லா  

நான் ஹீரோயினா நடிப்பேன்னு நினைக்கவேயில்லை!- மோனிகா சின்னகோட்லா  

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@thehindutamil.co.in

அகன்ற கண்கள். குண்டு கன்னங்கள். புன்னகை இதழ்கள் எனப் பார்க்கும்போதே மனதைக் கொள்ளை கொள்கிறார் ‘தோழர் வெங்கடேசன்’ பட நாயகி மோனிகா சின்னகோட்லா. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தே மோனிகாவுக்கு ரசிகர் வட்டம் தொடங்கிவிட்டது. அழகுப் பெண்ணைப் பார்த்து ஒரு ஹாய் சொல்லலாம் என்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டுக் கதவைத் தட்டினேன். பூப்போட்ட மஞ்சள் ஸ்லீவ்லெஸ் டாப்பில் மாடர்ன் மங்கையாக தரிசனம் தந்தவரிடம், ஒரு மீட்டிங்…

உங்க பேர்லதான் தெலுங்கு வாசனை வீசுதுன்னு பார்த்தா, படத்திலும் தெலுங்கு பேசி நடிச்சிருக்கீங்க போலயே?
எனக்குத் தெலுங்கு நல்லாவே தெரியும். எங்க குடும்பமே ஆந்திராதான். ஆனா, நான் பொறந்தது சென்னையில. படிச்சது கனடாவுல. எனக்குத் தமிழ் சரியா வராததால இந்தப் படத்துல நான் டப்பிங் பேசலை. தெலுங்கு பேசுற சீன்ஸ் படத்துல உண்டு. அதையும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டேதான் பேசிருக்காங்க. சீக்கிரமே, தமிழ் நல்லா பேசுவேன்.

 சுசீந்திரனின் ‘ஜீவா’ படத்துல ஹீரோயினுக்குத் தங்கையா குட்டிப் பொண்ணா வந்தீங்க. இப்போ ஹீரோயின்… இந்த மாற்றம் எப்படியிருக்கு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in