கடாரம் கொண்டான்- விமர்சனம்

கடாரம் கொண்டான்- விமர்சனம்

மலேசியாவுக்குள் வசிக்கும் காதல் தம்பதி, கடத்தல் கும்பலிடமிருந்தும் போலீஸிடமிருந்தும் தப்பிக்க ரிஸ்க் எடுத்தால் அதுவே ‘கடாரம் கொண்டான்.' 

மலேசியாவின் ட்வின் டவரில் நடக்கும் ஒரு குற்றத்தின் தொடர்ச்சியாகத் தப்பியோடும் விக்ரம் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு புதிதாக வேலைக்குச் சேரும் மருத்துவர் அபி ஹசன், கடத்தல் கும்பலின் மிரட்டலால் விக்ரமை போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிக்க வைத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அவர்  மனைவியையும் கடத்திச் செல்கிறார்கள். அபி ஹசன் தன் மனைவியைக் காப்பாற்றினாரா? விக்ரம் என்ன ஆனார்? என்பதே படத்தின் திரைக்கதை.

2010-ல், வெளியான ‘பாயின்ட் ப்ளாங்க்' என்கிற பிரெஞ்சுப் படத்தைத் தழுவி ‘கடாரம் கொண்டான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜேஷ் எம்.செல்வா. 

புதிதாக வேலைக்குச் சேர்ந்த இடம் என்பதால் அடக்கி வாசிப்பது, காதல் மனைவி மீதான அன்பைப் பொழிவது, நெருக்கடி நிலை காரணமாகத் தவறு செய்வது, மெட்ரோ ரயிலில் இளம்பெண்ணை மிரட்டி பின் மன்னிப்பு கேட்பது என அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் அபி ஹசன். கதைப் படங்களில் இனி அபி ஹசனைக் காணலாம். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in