கெடுவை நெருங்கும் என்.ஆர்.சி பட்டியல் வெளியீடு!- அச்சத்தில் அசாம் ‘வெளிநாட்டினர்’

கெடுவை நெருங்கும் என்.ஆர்.சி பட்டியல் வெளியீடு!- அச்சத்தில் அசாம் ‘வெளிநாட்டினர்’

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

ஜூலை 31. இந்தியாவில் உள்ள மற்றவர்களுக்கு வழக்கமான நாளாக விடியலாம். ஆனால், அசாமில் உள்ள பலருக்கு அவர்களது எதிர்கால வாழ்க்கையையே நிர்ணயிக்கும் நாள் அது. ஆம். என்.ஆர்.சி. (Nationl Register Of Citizens) எனப்படும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் அன்றுதான் வெளியாகிறது. காலங்காலமாக அசாம் மண்ணில் வாழ்ந்தவர்கள், அவர்களின் வாரிசுகள் என்று பலரும் இந்தப் பட்டியல் வெளியான பிறகு‘அந்நியர்கள்’ என்ற பெயருடன் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட விருக்கிறார்கள். சூழலைப் பொறுத்து, அவர்கள் நாடு கடத்தப்படவும் வாய்ப்பு உண்டு. மொத்தத்தில், அவர்களின் வாழ்க்கை நரகமாகப் போகிறது.

என்.ஆர்.சி.: என்ன பின்னணி?

1951 மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட பட்டியல் இது. அசாமில் குடியேறிய சட்டவிரோதக் குடியேறிகளை அடையாளம் காண்பதற்காகக் கொண்டுவரப்பட்டது. இந்தப் பிரச்சினை தொடங்குவதற்கு வரலாற்று ரீதியிலான, மத ரீதியிலான பல பின்னணிகள் உண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அசாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ய பிஹார், வங்காளம் என்று  நாட்டின் பல பகுதிகளிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள் எனப் பல தரப்பினரும் உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in