விடுதலைக்குக் காத்திருக்கும் வீரப்பன் வழக்குக் கைதிகள்!- 30 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாத அவலம்

விடுதலைக்குக் காத்திருக்கும் வீரப்பன் வழக்குக் கைதிகள்!- 30 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாத அவலம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

ரா ஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகக் குரல் எழுப்பிவருபவர்கள், அதே அளவு இன்னல்களை அனுபவித்துவரும் வீரப்பன் வழக்குக் கைதிகள் ஐந்து பேரின் நிலையை ஏனோ கண்டுகொள்வதே இல்லை.

இந்நிலையில், அந்தக் கைதிகளின் நிலை குறித்து முதன்முறையாக ஒரு கருத்தரங்கம் நடத்தி, ‘32 ஆண்டு களாகச் சிறையில் இருக்கும் ஐந்து கைதிகளைத் தமிழக, கர்நாடக அரசுகள் உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்று தீர்மானமும் இயற்றியிருக்கிறார்கள் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கமும், பியுசிஎல் அமைப்பினரும்.

பிப்ரவரி 12-ல் ஈரோட்டில் நடந்த இந்தக் கருத்தரங்கத்துக்குத் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் வி.பி.குணசேகரன் தலைமையேற்க, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்குரைஞர் ப.பா.மோகன், பாலமுருகன், எம்.எஸ்.கிருஷ்ணகுமார், பியுசிஎல் கணகுறிஞ்சி, ஹென்றி டிபேன், பால தண்டாயுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்களைத் தவிர, கர்நாடக, தமிழக சிறையிலிருக்கும் ஐந்து கைதிகளின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்தவர் அந்தியூர் அன்புராஜ். இவர் வீரப்பன் தொடர்பான வழக்குகளில் கர்நாடகச் சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து விடுதலையானவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in