சமயம் வளர்த்த சான்றோர் 10: பட்டினத்தடிகள்

சமயம் வளர்த்த சான்றோர் 10: பட்டினத்தடிகள்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

கோடி கோடியாக செல்வம் ஈட்டினாலும் உலகை விட்டுச் செல்லும்போது, நம்முடன் காதறுந்த ஊசி கூட உடன் வராது என்று உலகுக்கு உணர்த்தியவர் பட்டினத்தார். அவரது வாழ்க்கை, பெருஞ்செல்வம், வணிகம், பக்தி, இலக்கியம், பாடல்கள், அரசாட்சி முறைமை, குடும்ப வாழ்வு, உறவுகள், அறம், அநீதி, ஊழ்வினைப் பயன் என்று அனைத்தையும் கூறி, வாழ்வியல் குறித்த சிந்தனைகளை மக்களுக்கு புகட்டுவதாக அமைந்துள்ளது. 

கி.பி. 11-ம் நூற்றாண்டில் வணிக நகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் சிவநேசர் - ஞானகலை தம்பதி வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உண்டு. திருவெண்காட்டில் உறையும் ஈசன் சுவேதனப் பெருமானிடம் மிகுந்த பக்தி கொண்ட சிவநேசர் தனது மகனுக்கு ஈசனின் பெயரையே சூட்டினார். திருவெண்காடர் என்றும் அவரை அழைப்பதுண்டு.

(செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தனக்கு ஞானம் கிட்ட வேண்டும் என்றும் மண்ணுலக வாழ்வை வாழ வழி செய்ய வேண்டும் என்றும் ஈசனிடம் வேண்டினான். அதன் காரணமாக, குபேரன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசரின் மகனாக அவதரித்து ‘திருவெண்காடர்’ என்ற பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுவதுண்டு.) 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in