ஹாட் லீக்ஸ்: அடங்காத ‘அக்ரி’யின் ஆசை!

ஹாட் லீக்ஸ்: அடங்காத ‘அக்ரி’யின் ஆசை!

அடங்காத ‘அக்ரி’யின் ஆசை!

நெல்லையைச் சேர்ந்த வேளாண் அதிகாரியான முத்துக்குமாரசாமி,  2015 பிப்ரவரி 22-ல் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்குத் தள்ளியதாக அப்போதைய வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அதன்பிறகு 2016-ல் அக்ரிக்கு சீட் கொடுக்காமல் ஓரங்கட்டினார். ஆனால், ஜெயலலிதா வின் மறைவுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவுக்குள் அதிகாரம் செலுத்தத் தொடங்கிய அக்ரி, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இந்நிலையில் தற்போது, தனது சொந்தத் தொகுதியான கலசப்பாக்கத்தில் போட்டி யிட கச்சிதமாய் காய்நகர்த்துகிறார் அக்ரி. இதனிடையே, “அப்படி அக்ரிக்கு கலசப்பாக்கத்தை ஒதுக்கினால், அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவேன்” என்று இப்போதே கொடிபிடிக்கத் தொடங்கிவிட்டார், கலசப்பாக்கம் சிட்டிங் எம்எல்ஏ-வான பன்னீர்செல்வம்.

உடுமலைக்கே ‘உடுக்கு’

தேர்தல் நெருங்க நெருங்க எதிர்க்கட்சிகள் விடும் ஏவுகணைகளை சமாளிப்பதைவிட, சொந்தக் கட்சியினர் கொண்டுவரும் பஞ்சா
யத்துகளை சமாளிப்பது முதல்வருக்கு பெரும் பாடாகிவிடும் போலிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர், பல்லடம் தொகுதியில் பேசும்போது, தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான கே.எஸ்.துரைமுருகனின் பெயரைச் சொல்
லாமல் விட்டுவிட்டார். இதற்கு அந்த இடத்திலேயே அமைச்சர் வேலுமணியிடம் பஞ்சாயத்துக் கூட்டிய துரைமுருகன், “முதல்வர் உரைக்கு கட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்துக் கொடுப்பவர், வேண்டுமென்றே எனது பெயரைப் புறக்கணிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in