பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

ஈரோடு

பெட்ரோல் பங்க்கில் ஊழியரும் மேலாளரும்...
“சார்… நம்மகிட்ட 10,000 லிட்டர் ஸ்டாக் இருக்கே? பழைய ஸ்டாக் முடியற வரைக்கும் பழைய விலைதான்னு போர்டு வைக்கலாமில்ல?”
“அடப்பாவி! முதலீட்டுக்கு வட்டி ஏறிட்டு இருக்குமே, நீயா கட்டுவே?”
“அது லோன்தானே... தள்ளுபடி பண்ணிட மாட்டாங்க?”
“ஏம்ப்பா... கடன் தள்ளுபடின்னு ஆளாளுக்குக் கிளம்பிட்டு இருந்தா யார்தான் லோன் கட்றது? அரசுக்கு வருமானம் எப்படி வரும்? இது கவர்மென்ட்டா.. அன்னச் சத்திரமா?”
“ஸாரி சார். தெரியாம கேட்டுட்டேன். இனிமே ஜவுளிக் கடையிலகூட தள்ளுபடி இருக்கான்னு கேட்க மாட்டேன்!”
- சி.பி.செந்தில் குமார், சென்னிமலை

சென்னை

தியாகராய நகரில் இருவர்...
“கலைஞர், ஜெயலலிதாவுக்குக்கூட இவ்வளவு போஸ்டர் ஒட்டிப் பார்த்ததில்லை. சின்னம்மாவை வரவேற்று எவ்வளவு போஸ்டர்கள் ஒட்டியிருக்காங்க… ஆச்சரியமா இருக்கு!”
“அதுவா… ஏகப்பட்ட 'பசை' இருக்குறதால ஒட்டியிருக்காங்க. அதையெல்லாம் கண்டுக்காதே...”
“பசைக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் மச்சி?”
“அடப்பாவி! பசைக்குக்கூட அர்த்தம் தெரியாம பாலிடிக்ஸ் பேசுறியேடா டியூப்லைட்டு...”
- பி.எம்.ஜெ.சுமையா, சென்னை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in