கூடைகட்டி தொங்க விடவோ...

கூடைகட்டி தொங்க விடவோ...

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அடுக்குமாடிக் குடியிருப்புல வீடு வாங்கினப்போ ஹேப்பியாத்தான் இருந்துச்சு. அதுல இருக்கிற வசதிதான் கண்ணுல பட்டுச்சு முதல்ல. அப்புறம் தான் எல்லா குழப்பமும் ஆரம்பிச்சுது.

அம்மிணி குஷியாத்தான் குடித்தனம் வந்தாங்க. தனியா ஒரு ரூம் அலாட் செஞ்சதும் மகனாருக்கும் மகிழ்ச்சி.. என்ன சிக்கல்னா... வீடு இருக்கிறது ரெண்டாவது மாடில. லிஃப்ட் இல்ல. எது வாங்கணும்னாலும் 30 படி எறங்கிப் போகணும். அப்புறம் மூச்சுமுட்ட ஏறி வரணும்.
வந்த புதுசுல ஜாலியா இறங்கிப் போன அம்மிணி, அப்புறம் மூட்டுவலின்னு சவுண்டு விட்டாங்க.  “தரையோட வீடு பாருங்கன்னு சொன்னா ஆகாசத்துல வாங்கி வச்சிருக்காரு”ன்னு அவுங்க சொந்தக்காரங்ககிட்ட  பேசறச்ச போட்டு விட்டாங்க. இன்னும் வீடு வாங்காத ரெண்டு பேர், எங்க வீட்டுல குறை கண்டுபிடிச்சு கூடுதல் சந்தோஷப்பட்டாங்க.

ஆபிஸ்ல இதைப் பத்தி புலம்பினப்ப, “இப்ப என்ன ஸார் பிரச்சினை?”ன்னு ஒருத்தர் அவரோட வேலையை பெண்டிங் போட்டுட்டு என்கிட்ட வந்து விசாரிச்சாரு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in