இனி மோடி எங்களுக்கு குலசாமி!- தேவேந்திரர் தன்னார்வல அறக்கட்டளை ம.தங்கராஜ் பேட்டி

இனி மோடி எங்களுக்கு குலசாமி!- தேவேந்திரர் தன்னார்வல அறக்கட்டளை ம.தங்கராஜ் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் 50 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. ‘குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன் உள்ளிட்ட 7 சமூகங்கள் இனி தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படும்’ என்ற மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு. இதற்கான தொடர் முயற்சிகளில் ஈடுபட்ட கையோடு, அம்மக்களில் கணிசமானோரை பாஜக அனுதாபிகளாக மாற்றியதில் பெரும்பங்காற்றியவர், தேவேந்திரர் தன்னார்வல அறக்கட்டளையின் நிறுவனர் ம.தங்கராஜ். முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியரான அவருடன் ஒரு பேட்டி.

 பெயர் மாற்றத்தால் இந்தச் சமூகத்தில் இனி என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

 இன்று காலையில் ராசிபாளையம் அருகே உள்ள அனுபாளையம் கிராமத்தில், இதே கேள்வியை ஒரு பெண் கேட்டார். "யம்மா, இனிமேல் நீங்க இந்தப் பள்ளர் சாதிச் சான்றிதழைக் குடுத்துட்டு, தேவேந்திரகுல வேளாளர் என்ற சாதிச் சான்றைப் பெற்றுக்கொள்ளலாம். இனிமேல், நீங்களே பள்ளர் சான்றிதழ் கேட்டாலும், அதிகாரிகள் தர மாட்டாங்கம்மா" என்றேன். உடனே அந்தம்மாவுக்குக் கண்ணீர் வந்துவிட்டது. வானத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். ஒரு பெருமைமிக்க சமுதாயத்தை இழிவுபடுத்த, இடைக்காலத்தில் - அதாவது 600 ஆண்டுகளுக்கு முன்பு சூட்டப்பட்ட அவப்பெயர் நீங்கியிருக்கிறது. மற்ற தலித் சமூகங்களை சாதியைச் சொல்லித் திட்டினால் பிசிஆர் கேஸ் கொடுப்பார்கள் என்றால், இந்தச் சமூகத்தினர் எதிர்த்து அடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இனி யாரும் அப்படி அழைக்க முடியாது என்பதால், தென்மாவட்டங்களில் சாதி மோதல்கள் குறையும். சாதி மோதல்களைக் காரணம் காட்டி தெற்கில் வராமல் இருந்த தொழில் நிறுவனங்கள் இனி தெற்கு நோக்கி வரும். இதுவே பெரிய மாற்றம் தானே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in