டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணியில் பாஜகவும் பாமகவும் தரும் அழுத்தங்கள் காரணமாக, அந்தக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது. இந்தப் பரபரப்புக்கு மத்தியில், அதிமுக கூட்டணி பங்கீடு தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
திமுக கூட்டணியைப் போலவே, அதிமுக கூட்டணியிலும் கடந்த மக்களவைத் தேர்தலில் இடம்பெற்ற கட்சிகளில் பெரும்பாலானவை அந்தக் கூட்டணியில் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது. தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாகத்தான் இன்னமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.