கரோனா ஏற்படுத்திய ஜூம் மீட்டிங் புரட்சி- சிலர் சாதிக்கிறாங்க... பலர் சோதிக்கிறாங்க!

கரோனா ஏற்படுத்திய ஜூம் மீட்டிங் புரட்சி- சிலர் சாதிக்கிறாங்க... பலர் சோதிக்கிறாங்க!

கே.சோபியா
readers@kamadenu.in

நம்மிடையே வாழும் மாபெரும் தீர்க்கத்தரிசிகளில் ஒருவர் சுவாமி நித்யானந்தா. வேடிக்கையாகச் சொல்லவில்லை. 2012 மே மாதம். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீன கர்த்தராக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கியது. போராட்டக்காரர்களைக் கண்டித்து நித்யானந்தா பக்தர்கள் உலகம் தழுவிய போராட்டத்தை உட்கார்ந்த இடத்தில் இருந்தே நடத்தினார்கள். இணைய வழியாக நடந்த அந்தப் போராட்டத்தை மதுரை ஆதீன மடத்தில், அகன்ற திரை வைத்து ஒளிபரப்பினார்கள் காவி தாவணி கட்டிய அவரது சிஷ்யைகள். எங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. "இதென்னடா கூத்து... அவனவன் இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே ஷார்ட்ஸ், டீ சர்ட்டுடன் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்து போராட்டம் நடத்துகிறான். அதை வெப்கேமிரா வழியாக பார்த்து சுவாமிஜி அகமகிழ்கிறாரே?" என்று.

இப்போதுதான் தெரிகிறது நித்யானந்தா எவ்வளவு பெரிய தீர்க்கத்தரிசி, தொலைநோக்குப் பார்வையுள்ளவர் என்று. நாட்டின் பிரதமர் தொடங்கி எல்கேஜி பிள்ளைகள் வரையில் இப்போது சுவாமியின் பாணியைத் தான் கடைபிடிக்கிறார்கள். ஸ்டாலினும், திருமாவும் அப்படியே நித்யானந்தா பாணியில் சில போராட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள். கரோனா கட்டுப்பாடுகளை மதிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்நிகழ்ச்சிகள் பல வகையில் சொதப்பியிருந்தாலும், சில நல்விளைவுகளையும் ஏற்படுத்தவே செய்திருக்கின்றன. இப்போது பொது நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி கிடைத்துவிட்டது என்றாலும், பொதுமுடக்க காலகட்டத்தைப் பதிவு செய்ய வேண்டியது நம் வரலாற்றுக் கடமையல்லவா? வாங்க பேசலாம்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலையில் ஒவ்வொரு சட்டப்பிரிவு குறித்து விளக்கமும், பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு பதிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார். அவரிடம் கேட்டபோது, "சாமானிய மக்களும் கொடுத்த வரிப்பணத்தில் கட்டிய பள்ளியிலும், கல்லூரியிலும் படித்துத்தான் நான் வழக்கறிஞராகியிருக்கிறேன். சமூகத்துக்கு நம்துறை சார்ந்த அறிவின் மூலம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறோமோ அதுதான் அந்தக்கடனை அடைக்கிற வழியென்று கண்டுபிடித்து, இதுபோன்ற கூட்டங்களில் பேச ஆரம்பித்தேன். கோவையைச் சேர்ந்த பிரியா, 22 வாரங்களாக இந்தக்கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரோனா காலத்தில் சினிமா, டிவி என்று முடங்காமல் சட்டத்தைத் திரும்பப் படிக்கிறோம், தரவுகளைத் தேடுகிறோம் என்கிற வகையில் மிகவும் பிரயோஜனமாக இருந்தது இந்த ஜூம் மீட்டிங். இன்னொரு வகையில் நீதித்துறையில் பெரும் புரட்சியையே ஏற்படுத்திவிட்டது ஆன்லைன் வழக்கு விசாரணை. இவ்வளவு காலமாக நீதிபதிகள் முன்னால் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தோம். இப்போது உட்கார்ந்து பேசுகிறோம். அதுவும் நீதிபதி உயர்ந்த ஆசனத்தில் இருப்பார். நாங்கள் கீழே நிற்போம். இப்போது சரிக்குச் சமமாக உட்கார்ந்து பேசுகிறோம். 100 வருடத்துக்கு முன்பு ஆண்டான் அடிமை சமூகம் இருந்தது. அதனால் மேலிருந்து கொடுக்கிற இடத்தில் நீதிபதி இருக்கிறார் எனும் அர்த்தத்தில் அந்த ஆசனம் அமைக்கப்பட்டது. இப்போது நீதிபதிகள் சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றே நடந்துகொள்கிறார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in