அமேசானை அமேஸானில் வாங்க முடியாது!- வனக்கொலையை ஆவணப்படுத்திய ஆசிரியர்

அமேசானை அமேஸானில் வாங்க முடியாது!- வனக்கொலையை ஆவணப்படுத்திய ஆசிரியர்

ரோகிணி
readers@kamadenu.in

விண்ணை முட்டும் மலைகள், பச்சைப் பசேல் காடுகள்… எனக் காட்சிகள் திரையில் விரிகின்றன. அலையடிக்கும் கடலில் சுழலும் செயற்கைக்கோள் கேமரா, தென் அமெரிக்க நாடுகளின் வரைபடம் மீது நகர்கிறது…. கொலம்பியாவைக் குறிவைக்கிறது. அடுத்து கிரிபிக்கெட்டே தேசியப் பூங்காவின் வனப்பரப்பு திரையில் விரிகிறது. படபடவென்று துப்பாக்கிகள் சுடும் சத்தம். பீரங்கிகள் வெடிக்கும் பேரொலி. இவற்றின் பின்னணியில் ஒலிக்கிறது எஃப்எம் ரேடியோ ‘இரவின் மடியில்’ நிகழ்ச்சிப் புகழ் ஆர்.ஜி.லட்சுமி நாராயணாவின் கரகர குரல்...

“அமேசான். ஒரு பெருவனத்தின் கூக்குரல்” - குரல் கண நேரம் நிற்கிறது. குரங்குகள் தாவும் சலனக்காட்சிகள். பற்றியெறியும் காடுகள். நிழலாய் ஓடும் வனவிலங்குகளின் அலறல்கள். பின்னணிக் குரல் தொடர்கிறது.  “பூமியின் அத்தனை வனங்களையும் பேராசை, பெரும்பசியினால் தின்று தீர்த்துவிட்டு நிலவில் நீரையும் செவ்வாயில் வேரையும் தேடும் மனிதர்கள் அபாயகரமானவர்கள். இங்கே இரண்டு விதமான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்... ஒன்று, வயிறு எரிந்து சாகும் கூட்டம். இன்னொன்று, வனம் எரிந்து சாகும் கூட்டம்... உலகப்பெரும் பிண்டத்தின் ஒற்றை நுரையீரலான அமேசான் எரிந்து கொண்டிருக்கிறது. 

இதை இயற்கை பேரிடர் என்று சொல்லுவது அபத்தம். நமக்குத் தெரிந்ததெல்லாம் கார்டுகளைப் (கிரெடிட் டெபிட் கார்டுகள் காட்டப்படுகின்றன) பற்றித்தான் காடுகளைப் பற்றியல்ல. பள்ளியில் ஒரு மரத்தை படமாக வரைந்துதான் ஒரு குடும்பமாக விளக்குவார்கள். இப்போது அந்த மரங்கள் காட்டில் இல்லை. நோட்டில் மட்டுமே இருக்கிறது. அன்று குரங்குகள் இலங்கையை கொளுத்தியது எரியூட்டுப்படலம். இன்று மனிதர்கள் இயற்கையை கொளுத்தியது வெறியூட்டுப்படலம். எரிந்து முறிந்த கிளைகள்... வானத்தில் உலர்ந்து கருகிய வேர்கள்... மண்ணில் எழுதி முடித்தன கடைசி அத்தியாயங்களை. எதைக் கேட்டாலும் அமேஸானில் வாங்கலாம். அமேசானை அமேஸானில் வாங்க முடியாது” என்று எச்சரிக்கிறது பின்னணிக் குரல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in