வாழிடம்

வாழிடம்

விஜயலக்ஷ்மி
vijaya9.madurai@gmail.com

காலையில் வாசல் பெருக்க கதவைத் திறந்த கல்யாணி அதிர்ந்து நின்றாள். வீட்டு வாசலை அடைத்துக்கொண்டதுபோல் சொதசொதவென ஈரமான சாணம். எதிர் வீட்டு அஞ்சலையின் மாடு, சாணம் போட்டுவிட்ட திருப்தியில் வாலை ஆட்டிக்கொண்டே அசைந்து அசைந்து நடந்துபோனது.

இதைக் கூட்டி அள்ளவும் முடியாது. இதில் கால் வைக்காமல் வெளியே போகவும் முடியாது. கல்யாணிக்குக் கோபம் வந்தது.
“அக்கா…” என்று எதிர்வீட்டைப் பார்த்து கத்தினாள்.

அஞ்சலை அன்றும் வழக்கம் போல காலை மூன்று மணிக்கே எழுந்து மாடுகளில் பால் கறந்துவிட்டிருந்தாள். ஐந்து மணிக்கு சொஸைட்டி ஆள் வந்ததும் அளந்து ஊற்றிவிட்டவள், மாடுகளை அவிழ்த்து மேய்க்க விட்டுவிட்டு தொழுவத்தைப் பெருக்கியிருந்தாள். கல்யாணி கத்தும் சத்தம் கேட்டதும் வெளியே வந்தாள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in