ஸ்மார்ட் பக்கிள்- ஆரோக்கியம் பேண கடிகாரம் போதும்!

ஸ்மார்ட் பக்கிள்- ஆரோக்கியம் பேண கடிகாரம் போதும்!

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

முன்னெப்போதையும்விட ஆரோக்கியம் குறித்த அக்கறை மக்களிடம் இப்போது அதிகரித்திருக்கிறது. அதனால்தான், சர்க்கரை அளவு, இதயத் துடிப்பின் அளவு, கலோரியின் அளவு என்று உடல்நிலை சார்ந்த எல்லா விஷயங்களையும் உடனுக்குடன் தெரிந்து
கொள்ள உதவும் நவீன சாதனங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, ஃபிட்பிட் (fitbit) பட்டைகளை வாங்கிக் கைகளில் கட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால், வழக்கமாக அணியும் கைக்கடிகாரத்துக்குப் பதிலாக இந்த ஃபிட்பிட் பட்டைகளை அணிந்துகொள்ள பலருக்கும் தயக்கம் 
இருக்கிறது. அவர்களுக்காகத்தான் இந்த ‘ஸ்மார்ட் பக்கிள்’ (smart buckle). இதை வழக்கமாக நீங்கள் அணியும் கைக்கடி
காரத்தின் பக்கிளாக இணைத்துக்கொள்ளலாம். இது ஃபிட்பிட் சாதனங்களைப் போல், உங்கள் உடல்நிலை சார்ந்த தகவல்களை உங்களுக்கு வழங்கும். நீங்கள் ஆசையாக வாங்கிய அல்லது உங்களுக்கு அன்புடன் பரிசளிக்கப்பட்ட கைக்கடிகாரத்தை, ஆரோக்கியத்தின் பெயரால் இனி தவிர்க்க வேண்டியதும் இல்லை!

வழக்கமான கைக்கடிகாரத்தின் பக்கிள் போலவே தோற்றமளிக்கும் இந்த ஸ்மார்ட் பக்கிள், மிக எளிதாகக் கைக்கடிகாரத்துடன் பொருத்தும் வகையில் நுட்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உடைக்கு ஏற்ற நிறத்தில் கடிகாரத்தின் பட்டையை மாற்றி 
அமைத்து அதில் தேவையான உடல்நிலை மானிட்டரையும் இணைக்கும் வசதியும் இதில் அளிக்கப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in