மழை மனிதன்

மழை மனிதன்

ப்ரணா
prananaan@gmail.com

“மழை வருதா சந்தோஷ்?”
“என்ன தாத்தா?”
“ஒரே புழுக்கமா இருக்குடா…மழை வருதா பாரு.”
“ஏ.சி போடுறேன் தாத்தா…”
“யாருக்குடா வேணும் உன்னோட ஏ.சி? மண் வாசனையும், சாரலோட கலந்த காத்தும்தான் எனக்கு வேணும்.”
அவ்வளவுதான். மறுபடியும் நினைவிழப்பார்.

கடந்த ஒரு வாரத்தில் இது போல் நான்கைந்து முறை நடந்துவிட்டது. சந்தோஷின் மனதில் கவலை ரேகைகள் கிளை பிரித்துப் படர்ந்துகொண்டிருந்தன.

‘இந்தப் படிப்பு, இந்த அந்தஸ்து எல்லாமே என் தாத்தா கொடுத்ததுதான். ஆனா, அவரோட ஆசையை நிறைவேற்ற முடியாத நிலைமையில இருக்கேன். என் தாத்தா மாதிரி ஒரு மேன்மையான மனுஷனை யாருமே பார்த்திருக்க முடியாது. ‘நல்ல மனசு உள்ளவங்களோட நியாயமான ஆசை நிறைவேறாம போகாதுடா’ன்னு அடிக்கடி சொல்வார். தாத்தா சொன்னது தாத்தாவுக்கே பலிக்காம போயிடுமோ? கடவுளே தயவுசெஞ்சு அவரோட கடைசி ஆசையை மட்டும் நிறைவேத்திடு…’ மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஏதேதோ சிந்தித்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.
வரும் ஏப்ரல் 20-ம் தேதியோடு தாத்தாவுக்கு எழுபத்தொன்பது முடிந்து எண்பது தொடங்கப்போகிறது. இன்னமும் தாத்தா மனசில் குழந்தையாய், வேகத்தில் இளமையாய்தான் இருக்கிறார். ஆனால், கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்குக் காரணமாகப் படுத்த படுக்கையாக நினைவிழந்து கிடக்கிறார். அவ்வப்போது நினைவு திரும்பும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in