தடம் புரள்கிறதா தமிழ்ப் பல்கலைக்கழகம்?- வெதும்பும் தமிழ் ஆர்வலர்கள்

தடம் புரள்கிறதா தமிழ்ப் பல்கலைக்கழகம்?- வெதும்பும் தமிழ் ஆர்வலர்கள்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு, மொழிச் சொற்கள் உருவாக்கம் எனத் தமிழ் வளர்ச்சியில் பெயர் வாங்க வேண்டிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளாலும், நீதிமன்ற வழக்குகளாலும் அல்லாடிக் கொண்டிருக்கிறது. 

குலைந்துபோன பெருமை

1981-ல், முதல்வர் எம்ஜிஆரால் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழில் உயர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உயர் ஆய்வு மையமாகத்தான் இது செயல்படத் தொடங்கியது. இதன் முதல் துணைவேந்தரான வ.அய்.சுப்பிரமணியன், தன்னை முன்னிறுத்திக்கொள்ளாமல் தமிழின் உயர்வுக்கான பணிகளை முனைப்புடன் செய்தவர். பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பணிகளில் நேர்மைக்குக் குந்தகம் வராமல் பார்த்துக்கொண்டவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in