கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் நீட்

கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும் நீட்

தமிழகத்தில் கடந்த ஆண்டு கட்டாயமாக்கப்பட்ட ‘நீட் தேர்வு’ விளைவுகள் மெல்ல வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. வருகிற கல்வி ஆண்டிலும் நீட் தேர்வால் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறத்து மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது.

2017-18 கல்வி ஆண்டில் நீட் தேர்வினால் 20 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. அரியலூர், திருவாரூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் அதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமில்லை. 2016-ல், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 38 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்தனர்.

இது கடந்த ஆண்டு 9 ஆகக் குறைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 9 என்பதிலிருந்து 4 ஆகக் குறைந்திருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 6 -லிருந்து 4 ஆகக் குறைந்திருக்கிறது. மறுபுறம் ஐந்தில் ஒரு மருத்துவ சீட்டை சென்னையைச் சேர்ந்தவர்கள் பெற்றுள்ளனர். சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே மருத்துவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் ராமநாதபுரத்தை ‘பின்தங்கிய மாவட்டம்’ என்று தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in