சமயம் வளர்த்த சான்றோர் 05: ஸ்ரீமத் வேதாந்த தேசிகர்

சமயம் வளர்த்த சான்றோர் 05: ஸ்ரீமத் வேதாந்த தேசிகர்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

வைணவ சமய ஆச்சாரியர்களுள் தூப்புல் பிள்ளை என்று அழைக்கப்படும் ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். ராமானுஜரின் சம்பிரதாயங்களைப் பின்பற்றி, தமிழ், சம்ஸ்கிருதம், ப்ராக்ருதம், மணிப்பிரவாள மொழிகளில் 124 நூல்கள் எழுதி வைணவ நெறியைப் பரப்பியவர். இவரது இயற்பெயர் வேங்கடநாதன்.  

ஒருசமயம் காஞ்சிபுரம் எனும் தலத்தில் உள்ள அத்திகிரி என்று அழைக்கப்படும் வேழமலையில் நான்முகன் அஸ்வமேக யாகம் செய்தார். அதன் பலனாக, திருமால் ‘வரதர்’  எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்துக்கு அருகே உள்ள திருத்தண்கா (ஸ்ரீதூப்புல்) தலத்தில் அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த அனந்தாசாரியார் (அனந்தசூரி) என்ற வைணவர் வசித்து வந்தார். இவர் ரங்கராஜ அப்புள்ளாரின் சகோதரி தோதாரம்பையை மணந்து இனிய இல்லறம் நடத்தி வந்தார்.

இந்தத் தம்பதியர் நீண்ட நாட்களாக பிள்ளைப் பேறு இல்லாமல் பெரிதும் வருந்தினர். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய திருமலை வேங்கடமுடையான், அவர்களை திருமலைக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர்களும் திருமலை சென்று வேங்கடவனை வேண்டினர்.  வேங்கடவனின் அருளால், அனந்தாசாரியார் – தோதாரம்பை தம்பதியின் மகனாக விபவ வருடம் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் (1268-ம் ஆண்டு) திருமலை வேங்கடவனின் மணியின் அம்சமாக வேங்கடநாதன் பிறந்தார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in