‘பொங்கல் பரிசு எனக்கு வேண்டாம்!’- முதல்வருக்கே திருப்பி அனுப்பிய முதியவர்

‘பொங்கல் பரிசு எனக்கு வேண்டாம்!’- முதல்வருக்கே திருப்பி அனுப்பிய முதியவர்

என்.பாரதி
readers@kamadenu.in

பொங்கல் பரிசாக இம்முறை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2,500 ரூபாய் வழங்கியது தமிழக அரசு. தேர்தல் சமயம் என்பதால் இந்த கூடுதல் ‘கவனிப்பு’ என்று விமர்சனங்கள் வெடித்த நிலையில், தான் வாங்கிய 2,500 ரூபாயை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி இருக்கிறார் தென்காசி திருமலையப்பபுரத்தைச் சேர்ந்த 74 வயதான ராமநாதன்!

பணத்தை தமிழக முதல்வரின் பெயருக்கு டிடி-யாக எடுத்து  அனுப்பிவிட்டு அதற்கான காரணத்தையும், அதனோடு ஒரு கோரிக்கையையும் முதல்வருக்கு அனுப்பி இருக்கிறார்.

இது குறித்து ராமநாதனிடம்  பேசினோம். “சமூகசேவையில் எனக்கு நாட்டம் அதிகம். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி வித்யா  இரண்டு கைகளும் இல்லாதபோதும் காலிலேயே பரீட்சை எழுதி பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற செய்தியைப் படித்தேன்.  அந்த மாணவியை எங்கள் ஊருக்கு அழைத்து வந்து பாராட்டுவிழா நடத்தினேன். விழா மேடையிலேயே அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை உதவி கிடைத்தது. கேரளத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த மாணவி சுமிதா பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 97 மதிப்பெண் எடுத்து, மாநிலத்தில் முதலிடம் பிடித்தார்.  அவரையும் அழைத்து வந்து ஒரு மதிப்பெண்ணுக்கு நூறு ரூபாய் வீதம் 9,700 ரூபாய் பரிசளித்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in