ஆனெ நடந்த காட்டுலயே அக்கிரமம் நடக்குது தில்லேலே லேலோ..!- வனாந்திரத்தில் ஒலிக்கும் வலியின் குரல்

ஆனெ நடந்த காட்டுலயே அக்கிரமம் நடக்குது தில்லேலே லேலோ..!- வனாந்திரத்தில் ஒலிக்கும் வலியின் குரல்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

"வந்த பேச்சு வண்டெடுத்து...
ஊருபூராம் ஓட்டும் கேட்டு
ஓட்டுப் போட்டு ஜெயிக்கும்போதே...
ஓட்டுப் போட்ட ஆதிவாசி
ஜெயிலுக்குள்ளே கிடக்கும்போதே...
லாலே... லாலே... லாலேலேலோ... லாலே லாலோ லாலே லாலோ..!"

- கானகத்தில் ஒலிக்கும் இந்தக் கானத்தின் வரிகளும், நடுங்கும் குரலும் மனதைப் பிசைகின்றன.

திரும்பிய பக்கமெல்லாம் வெம்பரப்புக் காடு. மலைகள், குன்றுகள், பள்ளத்தாக்குகள். தூரத்தில் ஒற்றையாய் சின்னதொரு பழைய ஓலை மற்றும் பாலீத்தீன் சாக்குகளால் வேயப்பட்ட குடிசை. அந்தக் குடிசையை ஒட்டி பெரும்பள்ளமாகக் கிடக்கிறது காய்ந்த ஓடை. அதனூடே பழைய பைகளைச் சுமந்தவாறு நடந்துவரும் வயோதிகத் தம்பதிக்கு வயது 90-ஐ எட்டும். அவர்கள் இருளர் குடிகளின் மூப்பனான பொத்தனும், அவரது மனைவி நஞ்சம்மாவும். கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதி தூவைப்பதி அருகே அவர்களைச் சந்தித்தேன். பாட்டெடுத்துப் பாடியது நஞ்சம்மாதான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in