விடைபெற்றார் ’யுவராஜ் சிங்’கம்!

விடைபெற்றார் ’யுவராஜ் சிங்’கம்!

பி.எம்.சுதிர்

கவாஸ்கர், கபில்தேவ், சச்சின், திராவிட் வரிசையில் இந்திய கிரிக்கெட்டின் நெடுந்தூண்களில் ஒருவரன யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் சகாப்தமும் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், முன்னவர்களைப் போல் யுவராஜ் கவுரவமான முறையில் வழியனுப்பப்படவில்லை என்ற சோகம் ரசிகர்களின் மனதில் நிச்சயம் இருக்கும்.

40 டெஸ்ட் போட்டிகளில் 1,900 ரன்கள், 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்கள், 58 டி20 போட்டிகளில் 1,177 ரன்கள் என்று ரன் மழை பொழிந்து ரசிகர்களை நனைத்தவர் யுவராஜ் சிங். பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் மாயாஜாலம் செய்தவர்.  ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 111 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 28 விக்கெட்களையும் இவர் சாய்த்துள்ளார். அதனால்தான் ரசிகர்களுக்கு இவர் மீது இத்தனை பாசம்.

யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான்.   கபில்தேவுக்கு இணையாக வேகப்பந்து வீச்சில் கலக்கியவர். ஹரியாணாவைச் சேர்ந்த கபில்தேவும், யோக்ராஜ் சிங்கும்  ஒரே சமயத்தில் வாய்ப்புத்தேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர்.  இருவரில் ஒருவருக்குதான் எதிர்காலம் என்றிருந்த நிலையில், தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கபில்தேவ் புகழின் உச்சிக்குச் சென்றார். யோக்ராஜோ, 1981-ல் இந்திய அணிக்காக ஆடக்கிடைத்த வாய்ப்பில் ஒரே விக்கெட்டை மட்டும் எடுத்ததால்,  அணியில் மீண்டும் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in