டெட்ரிஸ்ஸுக்கு வயது 35!- விடாமல் துரத்தும் ஒரு வீடியோ கேம்

டெட்ரிஸ்ஸுக்கு வயது 35!- விடாமல் துரத்தும் ஒரு வீடியோ கேம்

க.விக்னேஷ்வரன்

இன்றைய பப்ஜி யுகத்திலும் பலரால் தவிர்க்க முடியாத வீடியோ கேம்களில் ஒன்றான ‘டெட்ரிஸ்’க்கு இது 35-வது ஆண்டு. மூன்று வயது குழந்தைகளே மொபைல் ஆப்களில் வித்தை காட்டும் இன்றைய 4ஜி உலகில், நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது வீடியோ கேம் உலகம். ப்ளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் போன்ற நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு புது விளையாட்டை அறிமுகப்படுத்தி அதகளம் செய்துகொண்டிருந்தாலும், ‘தள்ளிப்போங்கடா பிள்ளக்கா பசங்களா’ என்று கெத்து காட்டிக்கொண்டிருக்கிறது டெட்ரிஸ்.

நான்கு + டென்னிஸ்

1984-ல் சோவியத் யூனியனின்  ‘டோரோட்னிட்ஸின் கம்ப்யூட்டிங் சென்டர்’ நிறுவனத்தில் பணியாற்றிய அலெக்சி லியானிடுவிச் பாஜட்னவ் என்ற புரோகிராமர் உருவாக்கியதுதான் டெட்ரிஸ் வீடியோ கேம். அந்நாட்டின்  ‘எலக்ட்ரானிகா 60' என்ற கணினியில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிரேக்க மொழியில் நான்கு என்பதைக் குறிக்கும் வார்த்தையான  ‘டெட்ரா'வுடன், தனது விருப்பத்துக்குரிய விளையாட்டான டென்னிஸைச் சேர்த்து  ‘டெட்ரிஸ்' என்று பெயர் வைத்தார் அலெக்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in