கபடி வீராங்கனைகளை உருவாக்கும் கிராமம்

கபடி வீராங்கனைகளை உருவாக்கும் கிராமம்

கரு.முத்து

மாலை 4 மணி. சற்று நேரத்துக்கு முன்னர் ஆரவாரமின்றிக் கிடந்த அந்த மைதானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் தொற்றுகிறது. மாணவிகள் தங்கள் தந்தையரின் வாகனங்களில் வரிசையாய் வந்து இறங்குகிறார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் மகளிர் கபடியும் அதற்கான உடற்பயிற்சிகளும் அங்கே வேகமெடுக்கின்றன. சும்மாவா... வகைதொகை இல்லாத அளவுக்கு சாதனையாளர்களை உருவாக்கிய மைதானம் அல்லவா அது!

ஆம், ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமாநாடு  ராமவிலாஸ் உயர்நிலைப் பள்ளியின் அந்தச் சின்னஞ் சிறு மைதானத்தில் கபடி பயிற்சி எடுத்து சாதித்தவர்களின் பட்டியல் மிகப் பெரியது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்தியா இரண்டாமிடம் பெற்றதற்கு இவ்வூரைச் சேர்ந்த பவித்ராவுக்கு முக்கியப் பங்குண்டு. பிரகதீஸ்வரி இந்திய அணிக்காகத் தேர்வானவர். தற்போது மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்துக்குப் பயிற்சியாளராகத் தேர்வாகியிருக்கிறார். பிரகதீஸ்வரி இடம்பெற்ற தமிழக அணி, மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டு முறை தங்கமும், ஒரு முறை வெள்ளிப் பதக்கமும் பெற்றது. காவியா, புனிதா, திவ்யா ஆகியோர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கபடி போட்டிகளில் மூன்று முறை விளையாடியவர்கள். ஆண்கள் கபடியில் மன்னார்குடி வடுவூர் சிறந்து விளங்குவது போல் பெண்கள் கபடியில் தென்னமாநாடு கொடிகட்டிப் பறக்கிறது.

கபடி மூலம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் இடம்பிடித்து தமிழ்நாடு ஆயுதப் படையில் பணிபுரிகிறார் இந்த ஊரைச் சேர்ந்த கவுசல்யா. தமிழ்நாடு காவல் கபடி அணியிலும் இடம்பெற்றுள்ளார். வெண்ணி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in