பாத்ரூம் டூரால் பரபரப்பான யூடியூப் உலகம்!- சமூக வலைதளத்தில் லேட்டஸ்ட் சர்ச்சை

பாத்ரூம் டூரால் பரபரப்பான யூடியூப் உலகம்!- சமூக வலைதளத்தில் லேட்டஸ்ட் சர்ச்சை

ஜெய்
jeyakumar.r@hindutamil.co.in

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் குட்டி வடிவேலு, ஸ்வீட்டி குட்டி, குட்டி டான் காதல் கதைகள் ட்ரெண்ட் அடித்ததையும் சர்ச்சையானதையும்தான் பலரும் கவனித்திருப்பார்கள். ஆனால், இந்தக் களேபரங்களைத் தாண்டி வகைதொகையாக வைரல் ஆனது ‘பாத்ரூம் டூர்’ எனும் வீடியோ. கிட்டத்தட்ட 37 லட்சம் பார்வைகளைத் தாண்டிய அந்த வீடியோவை வறுத்தெடுக்கும் ‘ரோஸ்ட்’ வீடியோக்களும் நூற்றுக்கும் அதிகமாக யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளன.

‘பாத்ரூம் டூர்’ வீடியோவைப் பதிவிட்டது, ‘வாவ் லைஃப்’ என்னும் யூடியூப் சேனல். இந்தச் சேனல், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ‘பிக் பாஸ்’ பிரபலமுமான அர்ச்சனாவினுடையது. அவரும் அவருடைய மகளும் சேர்ந்து இதில் வீடியோக்களைத் தொகுத்து வழங்கிவருகிறார்கள். 2020 மார்ச்சில் தொடங்கப்பட்ட இந்தச் சேனல், குறுகிய காலத்தில் பல லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இந்தச் சேனலில் வெளியான ‘பாத்ரூம் டூர்’ வீடியோதான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
வறுத்தெடுத்த யூடியூபர்கள்

இந்தச் சேனலில் அர்ச்சனாவும் அவருடைய மகளும் சேர்ந்து ‘கிச்சன் டூர்’, ‘வார்ட்போட் டூர்’, ‘ஃப்ரிட்ஜ் டூர்’ எனப் பல டூர்களைப் பதிவிட்ட பிறகு, ‘இனி என்ன டூர் பதிவிடலாம்?’ எனச் சிந்தித்துச் சிந்தித்து ‘பாத்ரூம் டூர்’ எனும் வீடியோவைப் பதிவிட்
டிருக்கிறார்கள். அந்த வீடியோவிலேயே, “இதற்குப் பயங்கரமான விமர்சனம் வரும்” என அர்ச்சனா சொல்கிறார். ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட படுபயங்கரமான விமர்சனத்துக்கு அந்த வீடியோ ஆளாகிவிட்டது. அர்ச்சனா ஆசைப்பட்டதுபோல அந்த வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது என்றாலும், தனி யூடியூப் சேனல்காரர்களிடம் வசமாக மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டுவிட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in