நாடக வழியில் ஒரு வகுப்பறை!- கல்வியைக் கொண்டாட்டமாக்கும் நாடக ஆசிரியர்

நாடக வழியில் ஒரு வகுப்பறை!- கல்வியைக் கொண்டாட்டமாக்கும் நாடக ஆசிரியர்

ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in

கையில் ஒரு பொம்மைத் துப்பாக்கி, வெடிகுண்டு சகிதம் வகுப்பறைக்குள் நுழைகிறார் ஆசிரியர். மாணவர்களிடம் அந்த வெடிகுண்டைக் காட்டி என்னவென்று கண்டுபிடிக்கச் சொல்கிறார். பாடப் புத்தகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் பக்கத்தை விரிக்கச் சொல்கிறார். 1916-ல் நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவத்தில் மிஞ்சிய குண்டுகளில் ஒன்றுதான் இது என்கிறார். “ஜாலியன் வாலாபாகுக்கு நாம் அனைவரும் செல்வோமா! வாருங்கள்!” என்று தன்னை நோக்கி மாணவர்களை எழுந்து வரச் சொல்கிறார்.

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாகில் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்களாக நீங்கள் ஒவ்வொருவரும் உயிர் பெற்றுவிட்டீர்கள்” என்கிறார் ஆசிரியர். கூடவே, ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஜாலியன் வாலாபாக் காட்சியை யூடியூபிலிருந்து எடுத்து மாணவர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கிறார். மாணவர்கள் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி ஆசிரியருடன் இணைந்து அச்சம்பவத்தை வகுப்பறைக்குள் நிழத்துகிறார்கள். வகுப்பு நேர முடிவில், “இப்போது நடந்ததை உங்களுக்குப் பிரியமானவருக்குக் கடிதமாக எழுதுங்கள்” என்கிறார் ஆசிரியர். இப்படியாக வரலாற்றுப் பாட வகுப்பறை சரித்திர பூமியாக உருமாறுகிறது!

மனப்பாடத்துக்கு அவசியமில்லை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in