பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

மருந்துக் கடை சிப்பந்தியும் நண்பரும்...
“உங்களை மாதிரி மெடிக்கல்காரங்களுத்தான் இப்ப நல்ல காலம்! கடையைச் சாத்த வேண்டியதே இல்ல...”
“ஏன்… நீயும் மளிகைக் கடையை மாத்தி மருந்துக் கடை வை… யாரு வேணான்னா?”
“சரி விடுப்பா… தலைவலிக்கு ஏதாச்சும் மருந்து இருந்தா குடு...”
“வழக்கமா தலைவலின்னா வேற ‘மருந்து’தானே வாங்குவே… என்ன புதுப் பழக்கம்?”
“அதான் ரெண்டு வாரத்துக்குக் கடைய மூடிட்டாங்கள்ல. இனி அடக்கி வாசிக்க வேண்டியதுதான்.”
“அடங்கியே இரு. அதான் எல்லாருக்கும் நல்லது!”
- அய்யாறு ச.புகழேந்தி, தஞ்சாவூர்.

தஞ்சாவூர்

டீக்கடை ஒன்றில்...
“தம்பி ஸ்ட்ராங்கா டீ ஒண்ணு போடுப்பா!”
“கோவிச்சுக்காதீங்கண்ணே… பாத்திரம் இல்லியா? பார்சல் மட்டும்தான்! போலீஸ் ரவுண்ட்ஸ் வரும்.”
“அதுசரி… பேசாம நியூஸ் பேப்பர்ல மடிச்சுக்குடு… எடுத்துட்டுப்போறேன்! விளையாடறீங்களாப்பா? கப்புல கொடு. தலையில துண்டைப் போட்டுக்கிட்டு ஓரமா நின்னு வாயில ஊத்திட்டுப்போறேன்! கள்ளச்சாராயத்தைக்கூட நாங்க இப்படி பயந்து குடிச்சதில்ல ராசாக்களா!”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in