ஸ்டாலினுக்கு வாய்த்த எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிகள்!- எகிறி அடிக்கும் எச்.ராஜா

ஸ்டாலினுக்கு வாய்த்த எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிகள்!- எகிறி அடிக்கும் எச்.ராஜா

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தேர்தல் தோல்வியை ஒதுக்கிவிட்டு வழக்கம்போல பேச ஆரம்பித்திருக்கிறார் எச்.ராஜா. ஸ்ரீரங்கம் ஜீயர் நியமனத்துக்கு எதிராக உரத்த குரல் எழுப்பி அந்த உத்தரவையே நிறுத்திவைத்தவர், அடுத்து அறநிலையத் துறை அமைச்சரைச் சந்திப்பது, கோயில்களுக்காகப் போராட்டம் நடத்துவது என்று அடுத்தடுத்த செயல்திட்டங்களையும் வகுத்துக் கொண்டிருக்கிறார். காமதேனு இதழுக்காக அவருடன் உரையாடினோம்.

இந்தத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 4 பேர் கரையேறிவிட்டார்கள். நீங்கள் தோற்றதற்கு என்ன காரணம்?

என்னுடைய காரைக்குடி தொகுதியின் பழைய வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் ஒன்று தெரியும். ஒருங்கிணைந்த அதிமுக, மேடம் ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்தித்த காலத்திலேயே இந்தத் தொகுதியில் 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப்போனது. பாஜக வெற்றிபெற்றுள்ள 4 தொகுதிகளுடன் இதை ஒப்பிட முடியாது. அந்தத் தொகுதிகள் எல்லாம்  ஏற்கெனவே அதிமுக வெற்றிபெற்ற அல்லது குறைந்த ஓட்டுக்களில் தோற்ற, பாஜக ஓட்டையும் சேர்த்தால் வெற்றிபெறும் வாய்ப்புள்ள தொகுதிகள் தான். காரைக்குடி அப்படியல்ல. இருந்தாலும் நான் 53 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in