விஜய் காட்டிய கணக்கு!

விஜய் காட்டிய கணக்கு!

வருமான வரித் துறையிடம்  விஜய் என்ன கணக்கு காட்டினார் எனத் தெரியாது. ஆனால், ஒரு செல்ஃபி எடுத்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தின் பலத்தை நிரூபித்தார் என்றே சொல்ல வேண்டும். விஜய்க்கு எதிராக நெய்வேலி ஷூட்டிங் ஸ்பாட்டில் பாஜக நடத்திய போராட்டம் பலரையும் முணுமுணுக்க வைத்தது.  விஜய் சேதுபதி நேரடியாகவே,  “போய் வேற வேலை இருந்தா பாருங்கடா” என்று கடுமையாகவே கருத்து வெளியிட்டார்.  “விஜய் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை” என்று எச்.ராஜா விளக்கம் சொன்னாலும், விஜய் ரசிகர்கள்  “அப்புறம் எதுக்காக விஜய் படம் வரும்போதெல்லாம் வான்ட்டடா வந்து வண்டியில ஏறுகிறீர்கள்?” என்று கலாய்த்தார்கள். விஜய் எடுத்த செல்ஃபியும் அவர் வேன் மீது ஏறி ரசிகர்களைச் சந்தித்த வீடியோவும்தான் கடந்த வாரம் முழுக்க வைரல். அதனுடன், மாஸ்டர் படத்தின் ‘ஒரு குட்டி கத’ சிங்கிள் ட்ராக் வெளியீடு செய்தியும் சேர்ந்து வர, படத்துக்கும் நல்ல புரமோஷன்!

பிரிவினை அரசியல் நடக்கிறது, எனினும் ஒன்றுபட்டு இருக்கிறோம். - ஏ.ஆர் ரஹ்மான்

ஆஸ்கர் வாங்கும் போது கூட அமைதியா இருந்த மனுசனையும் கடைசியில அரசியல் பேச வச்சுட்டீங்களேப்பா..!- ஜால்ரா காக்கா

2021-ல், விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்!- பிரேமலதா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in