கோதை கிராமத்திலிருந்து ஒரு தூரிகைப் படைப்பாளி!- சோதனைகளுக்கு இடையில் மிளிரும் சொக்கலிங்கம்

கோதை கிராமத்திலிருந்து ஒரு தூரிகைப் படைப்பாளி!- சோதனைகளுக்கு இடையில் மிளிரும் சொக்கலிங்கம்

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தூரிகைப் பணி ஒருபக்கம், எழுத்துப் பணி இன்னொரு பக்கம் என்று இயங்குபவர்கள் தமிழில் குறைவு. நாகர்கோவிலை அடுத்த கோதைகிராமத்திலிருந்து, இந்த இரண்டு துறையிலும் ஈடுபாட்டுடன் இயங்கிக்கொண்டிருப்பவர் சொக்கலிங்கம். பத்திரிகைகளுக்கும், புத்தகங்களுக்கும் ஓவியம் வரையும் இவர், சிறார் இலக்கியத்திலும் சீரிய பணியாற்றிவருகிறார்.

இவரைச் சந்திக்க, கோதைகிராமத்தில் உள்ள இவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். வீட்டின் மேல்மாடியில், தனிமையில் இருந்து வண்ணம் தீட்டவும், புத்தகங்கள் வாசிக்கவும் சின்னதாய் ஓர் அறை. அதன் மேல் பகுதி ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் மூடப்பட்டிருக்கிறது. மாடிப்படிகளுக்குப் பக்கச்சுவர்கள்கூட இல்லாததே இந்த ஓவியக் கலைஞனின் வாழ்க்கைப் பின்னணியின் குறியீடாக இருக்கிறது.
“என்னோட அப்பா கிருஷ்ணன் கல்சிற்ப வேலை செஞ்சுட்டு இருந்தார். வீட்ல நானும், தம்பியுமா ரெண்டு பிள்ளைங்க. சின்ன வயசுல இருந்தே எனக்குப் படிப்புல நல்ல ஆர்வம் இருந்துச்சு. ஆனா எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்னோட அப்பா இறந்துட்டார். அதுக்குப் பின்னாடி என்னோட மாமா வில்லிசைக் கலைஞர் சங்கரன் உதவியோட பத்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன்.

வீட்டுக்குத் தலைப்பிள்ளைங்கிறதால மேற்கொண்டு குடும்பத்தைப் பார்த்துக்கிற பொறுப்பும் எனக்கு இருந்துச்சு. அதனால படிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, நாகர்கோவில்ல ஒரு டிங்கரிங் ஒர்க் ஷாப்புக்கு வேலைக்குப் போயிட்டேன்” என்று சோதனைகள் நிறைந்த தனது இளமைக்காலத்தை நினைவுகூர்கிறார் சொக்கலிங்கம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in