அறிவாலயத்தில் ‘அரண்மனை 3’ ஷூட்டிங்!

அறிவாலயத்தில் ‘அரண்மனை 3’ ஷூட்டிங்!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

பைக் மீதேறி பறந்துகொண்டிருந்த பாச்சா, இருக்கும் கொஞ்சநஞ்ச முடியும் எதிர் காற்றில் கலைய, ஸ்டைலாக செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தான். “செல்ஃபி எடுத்து செல்வாக்கைக் காட்ட நீ என்ன பெரிய ‘மாஸ்ட’ரா? டீ மாஸ்டருக்கே சில்லறை பாக்கி வச்சிருக்கவனுக்கு செல்ஃபியெல்லாம் ஓவர்யா. சலம்பாம கம்னு வா” என்று சிரித்தபடியே கண்டித்த பைக், “இன்னிக்கு யாரு முதல்ல?” என்று கேட்டது. ஆசிரியர் அனுப்பியிருந்த பட்டியலை எடுத்து மேலும் கீழும் பார்த்துவிட்டு, “தமிழருவி மணியன்” என்றான் பாச்சா.

“ம்க்கும்… அவர்தான் ரஜினி கட்சி தொடங்கும் வரைக்கும் பேட்டியே கொடுக்கப்போறதில்லைன்னு சொல்லிட்டாரே?” என்றது பைக்.

“அட மெட்டல் மண்டையா! நாம எடுக்கிறதெல்லாமே கற்பனைப் பேட்டிதானடா? அவர் கண்டிஷன் நமக்கு எப்படி அப்ளை ஆகும்?” என்று சொன்னபடி, தமிழருவியின் இல்லம் நோக்கி பைக்கைச் செலுத்தினான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in