சுத்தல்ல விட்டியே சுப்பு பேரா!

சுத்தல்ல விட்டியே சுப்பு பேரா!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

நடு ராத்திரி. பன்னிரண்டு மணி இருக்கும். என்னோட மொபைல்ல லைட் எரியுது. யாரோ கூப்பிட்டுருக்காங்க. தூக்கக் கலக்கத்துல அலாரம் தான் அடிச்சிருச்சுன்னு நினைச்சு பதறிட்டேன். அதுக்குள்ளியா பொழுது விடிஞ்சிருச்சுன்னு. எழுந்து பாத்தா கால் வந்துருக்கு.

 எடுத்து “ஹலோ...”ன்னு சொன்னா, அந்தப் பக்கத்துலருந்து “கா...பா...டி...”ன்னு கேட்டுச்சு. “என்னது...”ன்னு திரும்பக் கேட்டா மறுபடியும் அதே  ‘கா... பா...டி...'

எனக்கு எதுவும் புரியலை. அதுக்கப்புறம் போனும் கட் ஆயிருச்சு. நான் செஞ்ச அமர்க்களத்துல அம்மிணியும் முழிச்சுட்டாங்க. போனைக் கையில வச்சுகிட்டு இருக்கிறதைப் பார்த்துட்டு, “அதென்ன நைட்ல கூட போன் பேசிக்கிட்டு...”ன்னு சவுண்டு விட்டாங்க.
 “அய்யோ... நான் பேசல. கால் வந்துச்சு.”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in