எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராய் இருக்கிறார் விஜய்!- ஆர்.கே.செல்வமணி  அதிரடி

எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராய் இருக்கிறார் விஜய்!- ஆர்.கே.செல்வமணி  அதிரடி

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

சினிமாவுக்காகப் பிரத்யேகமாக ஒரு துறையை அரசு உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலுவாக முன் வைக்க ஆரம்பித்துள்ளார் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி. அவரைச் சந்திக்க பெப்சி அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். தயாரிப்பாளர் ஒருவருக்கும் அவுட்டோர் யூனிட் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதை சுமூகமாகத் தீர்த்துவைத்து விட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.

சமீப காலமாக சினிமாவில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறதே?

அது சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள மோதல் அல்ல. சில நடிகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான மோதல். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இது இருக்கிறது. நடிகர்கள் அவ்வப்போது ஏதாவது அரசியல் கருத்துகள் கூறுவது இயல்புதான். அதை அரசியல் கட்சிகள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் அதைப் பெரிதுபடுத்திவிடுகின்றன. ‘முதல்வன்’ படம் வெளியானபோது அப்போது ஆட்சியிலிருந்த திமுக அந்தப் படத்தை எதிர்த்தது. அந்தப் படம் ஆந்திர மாநிலத்தில் வெளியானபோது, அம்மாநிலத்தின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அந்தப் படத்தைப் பாராட்டி அங்கீகாரம் கொடுத்தார். சந்திரபாபு நாயுடு தன்னை ‘முதல்வன்’ அர்ஜுனாகக் காட்டிக்கொண்டார். திமுகவினரோ, படத்தில் தங்களை ரகுவரனாகக் காட்டியிருப்பதாகக் கருதினர். அரசியல் கட்சிகள் சினிமாவை அணுகும் விதத்தில்தான் பிரச்சினை.
    
சினிமாவுக்காக அரசு தனியாகத் துறை அமைக்க வேண்டும் என்கிறீர்கள். அரசின் கட்டுப்பாட்டில் சினிமா வந்தால் மேலும் இடர்ப்பாடுகள் ஏற்படாதா?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in