நான் சிரித்தால் - திரை விமர்சனம்

நான் சிரித்தால் - திரை விமர்சனம்

கஷ்டம், துக்கம், வலி, வேதனை வரும்போது ஒருவனுக்கு அழுகைக்குப் பதிலாகச் சிரிப்பு வந்தால் என்னவாகும் என்பதுதான் ‘நான் சிரித்தால்’ படத்தின் கதை.

ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் காந்திக்கு (ஹிப் ஹாப் ஆதி) துக்கமோ பிரச்சினையோ ஏற்பட்டால் சிரிக்கும் வியாதி. இந்த வியாதி அவரது வேலைக்கே சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. காதலியும் விலகிச் சென்றுவிடுகிறார். இதற்கிடையே டில்லிபாபு (கே.எஸ்.ரவிகுமார்) - சக்கரை (ரவிமரியா) இருவருக்கும் இடையே யார் பெரிய ரவுடி என்ற போட்டி ஏற்படுகிறது. இதில் டில்லிபாபுவைக் கொலை செய்ய சக்கரை தனது ஆட்களை அனுப்புகிறார். அப்போது சக்கரை அனுப்பிய காரில் எதிர்பாராதவிதமாக ஏறிவிடுகிறார் காந்தி. இதனால் ஏற்படும் குழப்பங்களே படம்.

தன்னுடைய ‘கெக்க பெக்க’ குறும்படக் கதையை அழகாக முழுத் திரைக்கதையாக வளர்த்துள்ளார் ராணா. தலைப்பைப் பார்க்கும்போது, இந்தப் படம் சிரிக்கவைக்க முயலும் எனும் எதிர்பார்ப்பு ஏற்படலாம். ஆனால், அந்த முயற்சி பெரிய அளவில் வெற்றிபெறாமல் ஏமாற்றம் அளிக்கிறது.

சிரிக்கும் பாதிப்பு வந்த பிறகு அஜித், விஜய் படங்களுக்குச் சென்று உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் சிரித்துவிட்டு, முறையே ‘தல’, ‘தளபதி’யின் தீவிர ரசிகர்களிடம் அடிவாங்குவது போன்ற ஒரு சில காட்சிகளை மட்டுமே ரசித்துச் சிரிக்க முடிகிறது. மற்ற காட்சிகள் தேமே என்று கடந்துசெல்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in