இனி யாரும் தப்ப முடியாது!- தொலைந்து போனவர்களை தேடிக் கொடுக்கும் ‘லிங்க்’

இனி யாரும் தப்ப முடியாது!- தொலைந்து போனவர்களை தேடிக் கொடுக்கும் ‘லிங்க்’

லதா ரகுநாதன்
lrassociates@gmail.com

ஒரு புதிய ஏரியாவுக்கு உங்கள் நண்பரை வரச் சொல்லியிருக்கிறீர்கள். அவரும் குறித்த நேரத்துக்கு அங்கு வந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இருவரின் கையிலும் அலைபேசி இருக்கும். இருந்தும், “எந்த சந்துல நிக்கிறீங்க... நான் நிற்கிற இடத்துக்குப் பக்கத்துல ஒரு சோடா கடை இருக்கு. தெரியுதா?” என்று நீங்கள் சொல்ல, “ஏங்க, இங்க சந்தே இல்லைங்க. ஒரே தெருவா நீண்டுக்கிட்டே போகுது. நீங்க நிக்கிற இடத்துக்கு எதிர்த்தாப்புல ஒரு பீடா கடை இருக்கும் பாருங்க” என்று அவர் சொல்ல, அலைந்து திரிந்து ‘உங்க சங்காத்தமே வேணாம்’ என்று சந்திப்பையே ‘கேன்சல்’ செய்திருப்பீர்கள்.

குடும்ப கும்பல் சகிதம் சுற்றுலா சென்றிருக்கிறீர்கள். குலுமணாலியைக் குதூகலமாகச் சுற்றிப் பார்த்துவிட்டு, சுற்றுலா வேனில் மீண்டும் அமர்கிறீர்கள். சக பயணிகளின் தலையை எண்ணினால், இரண்டு தலைகள் குறையும். புதிதாகத் திருமணமான இளம் ஜோடி, எதிர்காலம் குறித்த டிஸ்கஷனுக்காக எங்கோ சென்றிருக்கும். நெட்வொர்க் இல்லாத இடத்தில் எங்ஙனம் சென்று இவர்களைத் தேடுவது என்று பரிதவித்து நிற்பீர்கள்.

இவையெல்லாம், நம்மில் பெரும்பாலானோரின் நொந்த… ஸாரி சொந்த அனுபவமாக இருக்கும். தமிழ் சினிமாவாக இருந்தால், ‘குடும்பப் பாடல்’ பாடி கூட்டத்துக்கு நடுவிலும் ஆளைக் கண்டுபிடிக்கலாம். நிஜத்தில்? இதுபோன்ற அவஸ்தைகளுக்கு முடிவுகட்ட வந்திருப்பதுதான்   ‘லிங்க் '(LynQ). இந்தக் கருவியின் பயன்பாட்டுக்கு அலைபேசி, டேட்டா கனெக்‌ஷன், வைஃபை இத்யாதிகள் எதுவுமே தேவையில்லை என்பதுதான் கூடுதல் விசேஷம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in