சினிமா பிட்ஸ்

சினிமா பிட்ஸ்

‘இந்தியன் - 2’வைத் தொடர்ந்து, கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ‘இந்தியன் - 2’ படப்பிடிப்பில் கமலின் போக்கை லைக்கா லைக் பண்ணவில்லையாம். அதனால், ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தை ட்ராப் செய்துவிடலாமா என லைட்டா யோசிக்கிறதாம் லைக்கா!
மநீம கட்சிப் பணத்திலேயே தலைவனுக்குப் படம் எடுக்கலாமே?

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘காக்கி சட்டை’ படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாகக் கைகோக்க உள்ளார் திவ்யா. இடையில் பருத்திருந்த அவர், இந்தப் படத்திற்காக சிறுத்து சிறுத்தைக் குட்டியாக மாறிவிட்டாராம். எடைக் குறைப்புக்குப் பின், ஜிம்மில் இருப்பது போன்று ஸ்ரீதிவ்யா வெளியிட்ட புகைப்படத்துக்கு ரசிகர்களிடம் இருந்து செம ரெஸ்பான்ஸாம்.

ரம்யா பாண்டியன் ஸ்டில்லை விடவா?

சமீபத்தில் டாப்சி அளித்த பேட்டி ஒன்றில், “நான் ஒருவரைக் காதலித்து வருகிறேன். அவர் நடிகரில்லை, கிரிக்கெட் வீரருமில்லை, அவர் இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவருமில்லை. எங்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றினால் திருமணம் செய்து கொள்வோம்” என்று கூறியிருக்கிறார்.
கோயிங் ஸ்டெடின்னு சொல்லுங்க...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in