நாம எல்லாருமே கோமாளிங்கதான் - சொல்கிறார் ‘நான் கோமாளி’ ராம் நிஷாந்த்

நாம எல்லாருமே கோமாளிங்கதான் - சொல்கிறார் ‘நான் கோமாளி’ ராம் நிஷாந்த்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

‘யூ-டியூப்’ சேனல்களில் பல ரகங்கள் உண்டு. இயற்கை உணவின் மகத்துவம் சொல்லும் மாற்று மருத்துவர்கள் முதல் அரசியல் நடப்புகளைச் சுளீர் மொழியில் விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் வரை நீளும் இந்தப் பட்டியலில், அன்றாட வாழ்வின் அவலங்களைச் சொல்லும் இளைஞர் கூட்டமும் உண்டு. அவர்களில் தனித்துவத்துடன் மிளிர்பவர் ராம் நிஷாந்த். ‘ப்ளாக் ஷீப்’ சேனலின் ‘நான் கோமாளி’ நிஷாந்த் என்றால் இணையவாசிகள் எல்லோருக்கும் தெரியும்.

அன்றாடம் நாம் கடக்கும் மனிதர்களின் மறுபக்கத்தை அட்டகாசமான பாணியில் பதிவுசெய்யும் ‘ப்ளாக்‌ ஷீப்’ சேனலின் காணொலிகளுக்கு லட்சக்கணக்கில் ‘லைக்ஸ்’ விழுகின்றன. ஆட்டோக்காரர் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர் வரை பல்வேறு தரப்பு மனிதர்களின் வாழ்க்கையை ‘நான் கோமாளி’ எனும் தலைப்பில் ‘நச்’ என்று பதிவுசெய்யும் ராம் நிஷாந்தை வடபழனியில் அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சிதான் ப்ரோ. அப்பா பெல் நிறுவனத்துல வேலை பார்த்தார். அம்மாவுக்கு அரசுக் கருவூலத்துல வேலை. வீட்ல நான் ரொம்பச் செல்லம். சின்ன வயசுல பண்ணாத சேட்டை இல்லை. மெட்ரிக்குலேஷன் பள்ளியில படிச்சிட்டு இருந்தேன். ஒழுங்கா படிப்பு வரலைன்னு அஞ்சாம் வகுப்புல அரசுப் பள்ளியில சேர்த்துவிட்டுட்டாங்க. அங்க இன்னும் சேட்டை ஜாஸ்தி ஆகிடுச்சு, தினமும் என்னை நினைச்சு அழறதே அம்மாவுக்கு வேலையாய்டுச்சு. ஒருவழியா ப்ளஸ் 2 பாஸ் பண்ணி பாலிடெக்னிக் சேர்ந்தேன். அதை முடிக்கும்போது 17 அரியர்ஸ். சரி, எப்படியாவது படிச்சு அதையெல்லாம் க்ளியர் பண்ணிடலாம்னு ப்ளான் போட்டேன். ‘நீ ஆணியே புடுங்க வேணாம். ஒழுங்கு மரியாதையா போய் காலேஜ் படி’னு என்னை மாமல்லபுரத்துல ஒரு காலேஜ்ல இன்ஜினீயரிங் சேர்த்துவிட்டாங்க.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in