தாறுமாறாய் எகிறும் தர்பார்: ரஜினி ‘பஞ்ச்’ - காத்திருக்கும் ரசிகர்கள்

தாறுமாறாய் எகிறும் தர்பார்: ரஜினி ‘பஞ்ச்’ - காத்திருக்கும் ரசிகர்கள்

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

#தர்பார் – என்று ஹேஷ்டேக் போட்டாலே 10 மணி நேரத்துக்கு ட்விட்டரே பற்றிக்கொண்டு எரியும் அளவுக்குத் தாறுமாறாக எகிறிக்கொண்டிருக்கிறது ‘தர்பார்’ படத்துக்கான எதிர்பார்ப்பு. அதிலும், செப்டம்பர் 11 மாலை வெளியிடப்பட்ட படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெறித்தனம் காட்டுகிறது. வேங்கை போல் சீறும் முகத்துடன் உடல் வலுவைக் காட்டும் ரஜினியைப் பார்த்த ரசிகர்கள் ‘தலைவா…’ என்று குதூகலிக்கிறார்கள். வரும் பொங்கலுக்குத் தித்திக்கும் கரும்பாகத் திரைக்கு வந்துவிடும் என்று காத்திருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் காக்கி யூனிஃபார்மில் கலக்கியிருக்கும் ரஜினியைத் தரிசிக்கும் ஆவலும் சேர்ந்து ‘தர்பா’ருக்கான தாகத்தைப் பன்மடங்காக்கியிருக்கிறது.

ரஜினியின் தொடர் வெற்றியின் ரகசியம் அறிந்தவர்கள், இயக்குநர் முதல் இசையமைப்பாளர் வரை புதிய திறமைசாலிகளுடன் கைகோக்கும் அவரது உத்தியைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ரஜினி – ரவிக்குமார் – ரஹ்மான் என்று மூன்று ‘ர’க்களும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்று 90-களில் சொல்லியடித்த ரஜினி, 2010-களில் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ் என்று பாதையை மாற்றிக்கொண்டார். இதோ, அதிரடியும் அரசியலும் கலந்து அசரடிக்கும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து ‘தர்பார்’ நடத்தத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in