நிச்சயம் ஸ்டாலினின் உள்ளம் முதல்வரை பாராட்டும்!- அமெரிக்க ரிட்டர்ன் ஆர்.பி.உதயகுமார் அதிரடி

நிச்சயம் ஸ்டாலினின் உள்ளம் முதல்வரை பாராட்டும்!- அமெரிக்க ரிட்டர்ன் ஆர்.பி.உதயகுமார் அதிரடி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அமெரிக்கா போய்வந்த குஷியில் இருக்கிறார் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும், “அமெரிக்காவில் பார்த்தீங்கன்னா...” என்றுதான் ஆரம்பிக்கிறார். வார்த்தைக்கு வார்த்தை முதல்வர் புகழ் பாடுகிறார். “காலையில இருந்து அண்ணே இந்தக் கதைகளைத்தான் சொல்றார். ராத்திரி 9 மணிக்கு வந்து நீங்க வேற அதையே கிளறிவிட்டுட்டீங்களே தலைவா” என்று அவருக்குப் பக்கத்தில் இருந்தவர்கள் நெளிந்தார்கள். அப்படியும் அசராமல் பேசிக் கொண்டிருந்த அமைச்சரிடம் ஒரு பேட்டி...

எப்படி இருந்தது வெளிநாட்டுப் பயணம்?

இதுதான் என் முதல் வெளிநாட்டுப் பயணம். இதற்காகத்தான் அவசர அவசரமாகப் பாஸ்போர்ட்டே எடுத்தேன். அமெரிக்காவைப் பார்த்து வியந்துபோனேன். இங்கே எட்டு வழிச்சாலைக்கே சண்டைக்கு வருகிறார்கள். அங்கே 20 வழிச்சாலை, 14 வழிச்சாலை என்று திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள்தான். ஒரு இடத்தில்கூட போக்குவரத்துக் காவலர்களை நான் பார்க்கவில்லை. எல்லாமே கண்காணிப்புக் கேமராதான். சிலிகான் வேலிக்குப் போனால், அங்கேயும் நம் தமிழர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள். இந்தச் சுற்றுப் பயணத்துக்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் என்று மொத்தம் 8,300 கோடி ரூபாய் மதிப்பில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in