ட்ரம்ப் காப்பியடித்த ஓவியம்?

ட்ரம்ப் காப்பியடித்த ஓவியம்?

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஓவியப் பிரியர் இல்லையென்றாலும் தன்னுடைய அலுவலகத்தில் பல ஓவியங்களை வாங்கி அடுக்கியுள்ளார். அதில் Two Sisters (On the Terrace) என்ற ஓவியமும் ஒன்று. இந்த ஓவியத்தை வரைந்தவர் ஆகஸ்டி பியரி ரெனாய்ர் என்ற பிரெஞ்ச் ஓவியர்.

ஆகஸ்டி பியரி ரெனாய்ர் இம்ப்ரஷனிச ஓவிய வரலாற்றில் மிக முக்கியமானவர். 18-ம் நூற்றாண்டில் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் அக்காலத்தைச் சேர்ந்த செல்வந்தர் குடும்பத்து உடையணிந்த இரண்டு சகோதரிகள் இடம்பெற்றிருக்கிறார்கள். சகோதரிகளில் ஒருவருக்கு இளவயது, மற்றொருவர் சிறுமி. சிறுமி ஒருபுறம் பார்த்துக்கொண்டிருக்க இளவயது சகோதரி வேறெங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் முன் பல வண்ணங்களில் நூல் கண்டுகள் இருக்கின்றன. அவர்களுக்குப் பின்புறம் முல்லைக்கொடி படர்ந்திருக்கிறது.

இந்த ஓவியத்துக்கு முதலில் Two Sisters என்றுதான்  பெயர் வைத்தார் ஆகஸ்டி. ஆனால், இதை முதலில் வாங்கிய கலைப் பொருட்கள் வியாபாரியான பால் டுரண்ட் இதனுடன்  (On the Terrace) என்பதையும் சேர்த்து Two Sisters (On the Terrace) என்று மாற்றினார். இந்த ஓவியத்தை அவர் 1,500 ஃபிராங்குக்கு வாங்கினார். இன்று இதன் மதிப்பு பல மில்லியன் டாலர். அதன் பிறகு இந்த ஓவியம் சிகாகோவில் உள்ள கலை அருங்காட்சியகம் வந்து சேர்ந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in