கையெழுத்தில் உறைந்த காலம்!- ஓர் இதழாசிரியரின் இலக்கிய தாகம்

கையெழுத்தில் உறைந்த காலம்!- ஓர் இதழாசிரியரின் இலக்கிய தாகம்

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

வாசிப்பு எனும் வசீகர ராஜ்ஜியத்தின் பிரஜையாகிவிட்ட ஒவ்வொருவரும், அவ்வுலகின் ராஜாக்கள்தான். அப்படி ஒரு மகாராஜாதான் 90 வயது சி.என்.மாதவன். கோவையைச் சேர்ந்த இவர், எழுத்தின் மீது கொண்ட காதலால், 70 வருடங்களுக்கு முன்னர் தான் நடத்திய ‘கீதா’, ‘உலகம்’ ஆகிய கையெழுத்துப் பத்திரிகைகளின் பிரதிகளை இன்னமும் தனது சேகரிப்பில் வைத்திருக்கிறார்.

மாதவன் பொக்கிஷமாய் சேர்த்து வைத்திருக்கும் கையெழுத்துப் பிரதிகளில் பாரதிதாசன், மு.வரதராசன், மு.கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன், மதியழகன், பெ.தூரன், சண்முகசுந்தரம், பெ.திருஞானசம்பந்தன், போ.குருசாமி, கி.வா.ஜகன்னாதன், ரா.பி.சேதுபிள்ளை என ஆனானப்பட்ட எழுத்தாளுமைகள் தங்கள் கைப்பட கருத்துகள் எழுதி கையெழுத்திட்டிருக்கின்றனர். இவரது வீட்டின் நூலக அறையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய, புதிய நூல்கள் இருக்கின்றன. நேற்று வாங்கிய புத்தகம் என்றாலும்கூட அதை முழுமையாக வாசித்து, ஒரு நோட்டில் குறிப்பெழுதி, பட்டியலிட்டுப் பாதுகாத்துவருகிறார்.

பழுத்த பழமாய் வீட்டில் வீற்றிருக்கும் மாதவனைச் சந்தித்தபோது, குழந்தையைப் போன்ற ஆர்வமுடன் தன் கையெழுத்துப் பத்திரிகைகளை விரித்துக்காட்டுகிறார். முத்து முத்தான கையெழுத்து, வண்ணங்களாய் ஜொலிக்கும் ஓவியங்கள் என்று ஒவ்வொன்றிலும் அத்தனை நேர்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in